இன்னுமென்ன வேண்டும் இறைவா

ராணி சம்பந்தர்

காலநிலைக்கோ கொலைவெறி
கோலம் மாறி ஞாலம் போடுதே
குளிர் கூதலோ வெள்ளணவே
ஆயத்தமாகிச் சாலம் கூட்டுதே

பூலோகம் படும்பாடு பெரும்பாடே
அல்லோலப்படும் அலங்ககோலம்
சில்லெடுப்பான சீரழிவுகள் மேலிட
பல்லிழிக்கும் ஆயுதங்கள் பாழிடுதே

அநியாயப் போர் விமானக் குண்டின்
வீச்சில் விழுந்த புவியின் பிளவுகளில்
பூமாதேவி கொதித்தெழும்பும் நியாயம்
சாதிக்கும் ஆவேஷ நெருப்பும் மூளுதே

மழை, வெள்ளம், பேரழிவுகள் ஏலம் போட
பனி ,குளிர் ,சூறாவளி அழிவுகள் பாலமிட
இன்னுமின்னும் படரத் தொடரும் துயரில்
என்னென்ன வேண்டும் எம் இறைவா .

Author:

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading