அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
இயற்கையின் தாண்டவம்
கவிதை நேரம்-05.12.2024
கவி இலக்கம்-1960
இயற்கையின் தாண்டவம்
——————————
செங்கதிரோன் ஒளியாகி கடலில் தாழும்
காரிருளாக்கி மறைந்து செல்வான்
சேவல் கூவி கோயில் மணி எழுப்பும்
பொன் ஒளி வீச பொலிய வருவான்
பூமாதேவிக்கு சீர் கொண்டு வருவாள்
வானத்துப் பறவைகள் இசை கேட்டு
வாசனை அற்ற மரமாக காணும்
தேன் சேர்க்கும் வண்டுகள் ரீங்காரம்
இலையுதிர் மரங்களிடை களை அழகும்
பச்சைப் பசேலற்ற நெல் வயல்களும்
கொட்டும் மழையுடன் காற்றும் வீசும்
மேகம் இருளும் இடி மின்னல் முழங்கும்
தென்றல் காற்றும் வசந்தமும் வீசி வரும்
சூறாவளியும் பெரு வெள்ளமும் நிரப்பும்
மக்களின் வீடும் வயல்களும் நீர் பரப்பும்
மக்கள் நீரில் மூழ்கி இறப்பும் நடக்கும்
மண் சரிவும் வீடு அழிவும் உயிர்களும் சாகும்
இடப்பெயர்வு கோயில் பாடசாலை தஞ்சமாகும்
ஈழத்தாயின் இயற்கை வளங்களும் அளிந்தே போகும்
