மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

இயற்கை 81

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-01-2026

காடு களனி அழித்து
கட்டடம் நீ வளர்த்தாய்
மலையைக் குடைந்து
மாளிகை எழுப்பினாய்

குளங்கள் அனைத்தையும்
குடியிருப்பாய் ஆக்கினாய்
பூமியின் நரம்பறத்தாய்
புவியதிர்ச்சிக்கு அதிர்ந்தாய்

மேகம் அழுகையில்
மனிதன் மிதக்கையில்
மண்ணும் சரிகையில்
மக்கள் புதைகையில்

மனதால் கலங்கினாய்
மாற்றுவழி கொண்டாயோ?
வீட்டுக்கொரு மரம் வளர்த்து
வீதியோரம் நெகிழி அகற்றி

இயற்கையை காத்து வர
இவளே எம்மை அரவணைப்பாள்.

Jeba Sri
Author: Jeba Sri

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading