இரா.விஜயகௌரி தீதும் நன்றும்……….

இரா.விஜயகௌரி

தீதும் நன்றும் தினத்தின் விதைப்பே
பொருள் நிறை உழைப்பு புதுமையின் படையல்
அரண்டவன் மடிந்தால் அரவமும் தீண்டும்
விடியலை வரைவோன் விதியும் வரைவான்

நாளைய பொழுதினை நமக்கென வரைய
இன்றைய நொடியை கணித்திடல் சிறப்பே
வாழ்வின் கணக்கை வரைபவன் எவனோ
நாணிடிம் நிலைதனை மாற்றிட உழைப்பான்

சிந்தனைக்கதவுகள் சீர்படத்திறந்தால்
மெய்ப்படும் வாழ்வியல். பொய்ப்படாதிருக்கும்
ஏற்றமும் இறக்கமும இயல்பெனக்கொண்டால்
ஏற்றப்படிகளை செதுக்கிட முடியும்

சொல்லும் செயலும் பிறழாதிருப்போர்
செயற்படும் தொடுகையில் உயர்வின் தெறிப்பே
ஆற்றலும் அறிவும் நமதாயிருப்பின்
அழிவினைத் தடுத்து ஆக்கத்துள் விதைப்போம

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading