“எல்லாளன்”

“கலைந்து போன காதல்”________________________ காற்றலையில் ஊற்றெடுத்து
கண் இமையில் நீர் கோர்த்து
கனக்கின்ற நின் காதல் நினைவு
காலத்தால் கரைந்து போன கனவு.
*நேற்றுப்போல் மனப்பதிவில்
நிற்கிறதோர் மழைப்பொழுதில்
நின்னை ஒரு பயணத்தில் கண்டு
நெஞ்சத்தில் காதல் மூண்டு கொண்டு
*கடிதம் ஒன்று கைமாறி சேர
காதல் சேதி பெற்றோர்க்கு போக
கடுகதியில் மெளனத்தை சுமந்து
காதனை நீ கருக்கினையே பயந்து
*காதலது காய்ந்துலர்ந்து போக
காதல்கணை ரதி ஒருத்தி வீச
ஓயாத அன்பில் என்னை உருக்கி
உட்கார்ந்தாள் இதயத்தில் ஒருத்தி.
*எதிர்பெதற்கும் அஞ்சாச நெஞ்சம்
எமக்குள்ளே கண்டோம் மண மஞ்சம்
தகர்க்க வல்ல எதிர்ப் உறுதி வேணும்
தன்மை கொண்டு காதலினை பேணும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading