கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

எல்லாளன்-

“தகாத உறவுகள்”
விவாக முறிவுகள் கூடும்
வெள்ளை நாட்டில் எம்மவர் ஊடும்
தகாத உறவுகள் மேலும்
தம்பதியராக வாழ்கின்ற போதும்
அவாக் கொண்டு அலைகிறார் பாரும்
அடுத்தவன் மனைவியை கணவணை நாடும்
உதாரணங்கள் பல ஆகி
உள்ளது குடும்ப உறவை மீறி.
*இருபது ஆண்டுகள் கடந்து
இல்லற உறவில் பிள்ளை இரண்டு
புருஷனோ ஐம்பது அகவை
பூண்டனள் மனைவி இன்னொரு உறவை
இருந்த தன் கணவனோடு
இல்லை திருப்தி என்றந்த மாது
ஒருமண பட்டு புது உறவில்
உள்ள பிள்ளைகள் பாசமும் பிரிவில்
**பிரமுகர் பெரியவர் போர்வை
பினணணியில் இந்த சீர்கேட்டு சேர்வை
கரம்பற்றி கட்டிய தாலி
கல்யாண சடங்கு சத்தியம் மீறி
மரணத்தும் உடன்கட்டை பந்தம்
மரபுகள் பண்பாடு தமிழரின் சொந்தம்
மரத்தந்த பண்பாடு போச்சோ
மண்ணைவிட் அகன்றதால் இக்கதி ஆச்சோ?

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading