தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

எழுகைக்காய் ஓர் ஆண்டே..

சிவதர்சனி இராகவன்

எழுகைக்காய் ஓர் ஆண்டே..(2083)
விழுகையின் வீரியம் சட்டென அகல
எழுகையின் சீரியம் பட்டென விரிய
அழுகையின் காரியம் மெல்லென சரிய
நெகிழுதல் மட்டுமே நமக்கெனப் பதியும்

உயருதல் நமக்கெனப் பதியமிட
உணர்வொடு பாமுகக் கவிக்களம்
பயனொடு பலனிடப் பலமுக தரிசனம்
இயன்றிட உழைத்திட உலகே மகிழும்..

எழுதிட முழுமையும் எண்ணிய நிலைக்க
வழுவின்றி வலியின்றி வழுயுண்டு பாரீர்
தழுவிடும் கரங்களும் தகைமையொடு
உலவிடும் விண்மதி எழிலது உனதென..

வெற்றி நமதே வேளை இதுவே
கற்றிட ஊறும் அறிவும் இங்கே
பெற்றிடப் புதையல் இனிதே
கவியது களமிது கரமது பதியுமே..

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading