அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
ஐயோ வெள்ளம் கொண்டு போயிட்டா என்ட மச்சானை
ஐயோ வெள்ளம் கொண்டு போயிட்டா
என்ட மச்சானை
வானம் பிளந்து மழையும்
கொட்டுது
வயல் வரம்பும் நிரம்பி
ஊரே தள்ளி அடிச்சி நிற்கிது
உள்ளூர் ஏரி நிரம்பி வயல்வரம்பு
காணாமல் போனது
கடலும் ஆறும் காதல் கொண்டு
கலவை செய்யுது
கரைபுரண்டு மீீன்களெல்லாம்
கரையில் துள்ளுது
வேல வெட்டியின்றி வீட்டில்
கிடந்த என்ட மச்சான்
சும்மா இ௫ந்தவர உசிப்பேத்தி
ஊரச்சுத்தி வெள்ளம் பார்க்க
பக்கத்து வீட்டுக்காரன் தோணிகட்டி
ஜோடி போட்டு கூட்டிப்போனான்
தோல் மேல கைபோட்டு
சோக்கா போனாங்க ஓடி
வாகனேரி …மீயாங்குளக்கட்டுடைச்சி
வாய்க்காலுக்குள் தோணியுடைஞ்சி
மாச்சான் போன தோணிகவிழ்ந்து
காணமல் போனது தண்ணிக்குள்ளே
மறைச்சி
மூன்று நாளாத் தேடி
முற்படையும் அங்கு கூடி
என்ட தங்க மச்சானக் காணவில்ல
போடி
அவங்க போன தோணிய மட்டும்
இழுத்து வந்தாங்க ஊரே கூடி
ஆறு ஏழு புள்ளையோட
நடுத்தெ௫வில்ல நிற்கிறேன் பா௫
தாயையும் இந்தக் குட்டி கு௫மானப்
பெறுப்பு எடுப்பார் யா௫
பாரத்தை எல்லாம் என்ட தலையில
ஏற்றி விட்டு
வெள்ளத்தில வெடுக்கென்று
போய்விட்டிங்க தங்க மச்சான்
நல்ல தங்கால்போல நானும் வர
பாத்தேன்் மச்சான்
வெள்ளம் வடிஞ்சி வெள்ள நிவாரணம்
கொடுக்காங்க தங்க மச்சான்
அந்த லைனில நம்ம அர டசினுடன்
நிற்கேன்் என்ட தங்க மச்சான்
[௨ங்க ஊரின்் உண்மைச் நிகழ்வு
நிறையப் பெண்கள் விதவையானார்கள்்]
வஜிதா முஹம்மட்்
