மறவர்குலத்தின் மாதரசி…..

ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய்...

Continue reading

ஒன்றியே வாழ்வோம்

நகுலா சிவநாதன்
ஒன்றியே வாழ்வோம்

மாமழை பெய்யுது மனமது நிறையுது
பூமழைபோலே கொட்டுது நீரும்
வேரது மகிழுது வெந்தணல் குறையுது
தாரணி செழிக்குது தண்மையும் நிறையுது

குளிரது வருகுது கூதலும் தொடருது
காலமும் மாறுது கனிவும் கூடுது
நேற்றைய வாழ்வு நெடுங்கதையானது
வேற்றுமை யின்றி வெண்மணல் பரப்புது

இயற்கையின் மகிழ்விலே இனிமையும் தொடருது
இதயமும் குளிருது இன்னெழில் மாற்றமாய்
வேற்றுமையின்றி ஒற்றுமை வளர்த்து
வேற்றின மக்களுடன் ஒன்றியே வாழ்வோம்

நகுலா சிவநாதன் 1878

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading