« கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் »

நேவிஸ் பிலிப்

வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்

பாதையோர அங்காடிகளில்
ஆரவாரக் குரலழுப்பிய
மக்கள் கூட்டத்தின் நடுவே
அமைதியின் மன்னனை காணவில்லை

வீட்டுக்குள்ளே ஆட்டம் பாட்டம்
விருந்தும் மருந்துமாய்
விழாக்கால கொண்டாட்டம்
வண்ண வண்ண விளக்கொளியிலும்
வடிவழகனைக் காணவில்லை

இங்கும் ஒரு கூட்டம்
இன்னிசை இசைக்க
துள்ளிக் குதிப்போர் நடுவிலும்ம்தூ
தூய பாலனைக் காணவில்லை

ஊரெங்கும் தேடியும்
உத்தமனைக் காணவில்லை
ஊர்தாண்டி வந்த வேளை
ஓர்ஒலை குடிசைகண்டு நின்றேன்

ஒட்டி உலர்ந்த உருவம்
ஒளியிழந்த கண்கள்
பசியால் மெலிந்த
பாவப் பட்ட பையன்

எழுத்தறியா சிறுவனின்
விழி சொன்ன மொழியில்
விழித்துக் கொண்டேன்
தேவ பாலனைக் கண்ட மகிழ்வில்
தொடர்ந்தேன் பயணம்
சிறுவனை அணைத்தபடி.,,,,,,,
நன்றி……

0

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading