கமலா ஜெயபாலன்

சிறுமை கண்டு பொங்குவாய்

கத்தி யின்றி ரெத்தம் மின்றி
கண்ணியமாய் வாழ்வது கவலையற்ற வாழ்வே
புத்தி யோடு புதுமையாகப் பிறக்கும்
புதிய வாழ்வே பொன்னான காலம்

உண்மைக்கு மதிப்பு இல்லை யிங்கு
உயர்வுக்கு தடையுண்டு யிங்கு
மண்ணுக்கு மணமுண்டு மனதிற்கு யிதமுண்டு
மலருக்கு மணமுண்டு மனிதற்கு குணமில்லை

ஏழை என்பான் எட்டியும் உதைப்பான்
ஏப்பம் விடுவான் ஏழையின் உழைப்பில்
வாழை யடியாய் வாழ்ந்தவனும் இன்று
வயிற்றிற்கு உணவின்றி வாடுகிறான் பாரில்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
உண்மயே உயர்வு ஊக்கமே ஆக்கம்
நன்றே செய்வோம் நல்லாய் வாழ்வோம்
நானிலம் ஓங்க நரிகளை விரட்டுவோம்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading