கமலா ஜெயபாலன்

கவிஞனின் ஆயுதம்
——————————
பாரினில் பாவலர்
பாடிய பாடல்கள்
வேரினும் ஆழமாய்
வேகமாய் ஊன்றும்.
காரிருள் ஆனாலும்
கவிஞனின் எழுதுகோல்
கூரிய முனையால்
கீறிடும் வலிமையாய்/

செந்தழிழ் கொண்டு
செதுக்கிய ஆயுதம்,
சந்துகள் ஓடிச்
சரித்திரம் படைக்க,
எந்தனை ஆளும்
இன்பத் தழிழை,
வந்தனை செய்துமே
வாழ்த்தி வரைவோம்/

பாரதியரும் பரதிதாசனும்
பதமாய் ஆக்கியே,
வீரகாவியம் படைத்த
விந்தையும் கண்டோம்.
தீரமான சிந்தனையால்
தீட்டிய கருத்தும்,
காரமாகி உரைத்துடும்.
கருத்தை உணர்வாய்/

எண்ணத்தை எழுத்தாக்கி,
இதையத்தை கல்லாக்கி,
வண்ணத்தை வரிகளாக்கி,
வார்த்தைகளை தீயாக்கி
விண்ணுலகம் போற்றும்
வீரனின் எழுதகோல்.
கண்ணிற்குள் மணியாய்
காக்குமே கவிஞரை/

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading