கற்றலின் படியே…காசினி உயர்வே…

ரஜனி அன்ரன்...(B.A) கற்றலின் படியே... காசினி உயர்வே...15.10.2026 அறிவெனும் சுடர்விளக்கு அணையாத ஒளிவிளக்கு கல்வியெனும் பெருவிருட்சம் கலங்கரை...

Continue reading

கற்றலின் படியே…காசினி உயர்வே…

ரஜனி அன்ரன்…(B.A)
கற்றலின் படியே…
காசினி உயர்வே…15.10.2026

அறிவெனும் சுடர்விளக்கு அணையாத ஒளிவிளக்கு
கல்வியெனும் பெருவிருட்சம்
கலங்கரை விளக்கானது காசினிக்கு
அறியாமை இருளில் மூழ்கியஉலகை
அறிவெனும் ஒளியால் மாற்றுமேகல்வி
ஆயுதம்ஏந்தாப் புரட்சியொன்றை
அகிலமதில் மலரச்செய்யுமே கல்வி !

வாழ்க்கைப் படகினைச் செலுத்திட
வழிகாட்டும் துடுப்பாய் அமைவது கல்வி
தாழ்நிலையிலும் தலைநிமிரச்செய்து
காசினியில் எமக்கு முகவரிதருவது கல்வியே
கல்விகற்றலே காசினிக்கு என்றென்றும் உயர்வு !

அறிவியல் விந்தைகள் பலபுரிந்து
விண்வெளி தாண்டியும் கொடிபறக்கும்
சிந்தனைப் பசியைத் தூண்டிவிட்டு
தேடலின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி
புதியதோர் உலகைப் படைக்கவைக்கும்
அறிவெனும் கல்வியே அகிலத்தின் வேராம்
கற்றலின்படியே காசினி உயர்வாம் !

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading