கல்லறைகள் திறக்கும்…

வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்…..
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும் அனுதினமும் எம்மோடு
அவலத்தை விதைத்தது
அனுதினமும் புதைத்தது
எழுந்தனர் வீரர்கள் எமை காக்க தமையீர்ந்தார்
தற்கொடையாய் தகர்ந்தழிந்தார்
உறவுகளை காப்பதற்காய்
உயீர்ந்த உத்தமர்கள்
கனவுகள் மெய்படுமே
கார்த்திகை ஒளியேற்றும்
காந்தமலர் பூத்தூவும்
கல்லறைகள் தாழ்திறவாய்
கண்மணிகாள் கண்திறவாய்.
நன்றி

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading