13
Nov
நேவிஸ் பிலிப் கவி இல(521)
பிரபஞ்சத்திலோர் பிரசவம்
வானலையில் தவழ்நது
காதோரம் நுழைந்து
தமிழால் இசை பாடிய
...
13
Nov
முதல் ஒலி 76
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-11-2025
ஐரோப்பிய முதல் தமிழ் ஒலியே
அகிலமெங்கும் அலை ஓசை
உலகமெங்கும் கலைஞரை...
12
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
கவிதை நேரம்-09.05.2024 கவி இலக்கம்-1870 “அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே” ——–
கவிதை நேரம்-09.05.2024
கவி இலக்கம்-1870
“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”
————————–
ஐயிரண்டு திங்கள் அவனியிலே என்னைச் சுமந்து
பகல் இரவு பாராமல் விழித்திருந்து
பட்டினியையும் ஒழுங்கே பறக்கவிட்டு
அவனியிலே உதிரத்தையே சிந்தியவள்
கருவிலே காத்து சுமந்தவள்
கண்ணென எண்ணி காத்து கிடந்தவள்
கைகளிலும் இடுப்பு தோள்களிலும்
சுமைகளான பொழுதுகளையும்
சுமமாக எண்ணி எனைக் காத்தவள்
இரத்தத்தை பாலாக்கினாள்
முத்தத்தை அன்பு பரிசாக்கினாள்
துன்பம் அகற்றி பொறுமைசாலியானாள்
மனதெல்லாம் மனக்கோட்டை எழுப்பினாள்
அகிலத்தை அறிய வைத்தவளே
அறிவுச் செல்வத்தை எனக்களித்திட்ட
தியாகச் சுடரல்லவா என் அன்னை
அன்னையின் அன்பிற்கு அகிலத்தில் நிகருண்டோ
வையகத்தில் உயரச் செய்து
அன்னையர் தின வாழ்த்தோடு வாழ்த்திடுவோம்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...