கவிதை 238 நம்பிக்கை

இ.உருத்திரேஸ்வரன்

ஒவ்வொரு உயிருள்ளும் இருக்கும் சக்தி
இதை கை விட்டால் இரண்டாகும் மனம்
சுயமாய் எழுந்திட நம்பிக்கை கொண்டு
காலடி எடுத்துவை முன்னேற்றப்பாதையிலே

கடப்பாரை கொண்டு கிணறு
தோண்டலாம் நம்பிக்கை இருந்தால்
சறுக்கி விடும் பாதை எல்லாம்
வெற்றிப்படியாய் மாற்றிடுமே நம்பிக்கை

இது இன்றி வாழ்க்கை இல்லை
கடக்க வைக்கும் உன்னை எல்லைவரை
இதை நம்பி வெற்றியுடன் நடைபோடு
அதுவே வாழ்வின் முன்னேற்றம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading