தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

கவி இலக்கம் : 32

கவி இலக்கம் : 32 விண்ணவன் – குமுழமுனை

ஆண்களின் வலி.
*~***~*
ஆண்கள் எப்பொழுது
வலியை மறைக்க
சிரிக்கதொடங்கினார்களோ!

அப்பொழுதே
இவ்வுலகும்,
சமுதாயமும்,

ஆண்களுக்கு
எப்பொழுதும்
வலிக்காது,

என்று முடிவு
செய்து விட்டது,
ஆனால் ஆண்களுக்கு
மட்டுமே தெரியும்,

அந்த சிரிப்புகளிற்கு
பின் எத்தனை
வலிகள் உள்ளதென,

இதை அறியாத
இவ்வுலகமோ!
ஆண்களை எவ்வளவு
முடியுமோ அவ்வளவு
வேதனைப்படுத்துகிறது,

ஆனால் அதற்கு
ஆண்களாகிய
நாங்களோ!

பேசுபவர் மனம்
நோகக்கூடாதென
எப்பொழுதும் போல,

வலிகளை
தாங்கிக்கொண்டு
சிரித்துவிட்டு
செல்கிறோம்.
*~***~*
விண்ணவன் – குமுழமுனை

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading