குதறும் அலைபேசியால் சிதறும் சமுதாயம்

ராணி சம்பந்தர்

அன்றைய காலமதில்
வாசிக்கும் புத்தகமதில்
அகம் முகம் மலர்ந்ததே

இன்றைய கோலமதில்
நேசிக்கும் சத்தகமதில்
சிவந்த அகம் அலறுகிறது

மூளை கொத்த கண் குத்த
கை, கால் விறைக்க உடல்
ஒரே இடம் அமர குளறிய
குடலில் அலைபேசி உளறுகிறது

போர்த்து மூடிக்கொண்டு தலை-
அணையாய்க் கட்டிப் புரளும்
உலைபேசியில் உருண்டு வரும்
புதுப்புது குறுஞ்செய்தி கூதலிட
சீனவெடி போல் வெடித்துச்
சிதறும் சமுதாயம் சிதறுகிறதே.

Author: