குறை

ராணி சம்பந்தர்

குறை ஒன்றும் இல்லை என்றே
பறை சாற்றுபவர் பல துறையில்
கற்றுத் தேர்ந்த போதும் அறவே
மறந்து வாழ்ந்து மறைத்திடுவர்

தம் குறை எல்லாமே மறைத்திட
வாழ்வில் வென்றவர் போலவே
மற்றோரை உழவு பார்த்தபடியே
ஏழனம் செய்வோர் தன் வினை
தன்னைச் சுட புற்றுநோயிலே
பற்றியது போல உறைந்திடுவர்

விறைத்துப்போன குறைகளோ
நெஞ்சறையிலிருந்து வயிற்றறை
கிழித்துக்கொண்டு நிமிர நின்றே
போராடி வென்றிட அறைந்திடுவர் .

Nada Mohan
Author: Nada Mohan