தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

அடுத்த தலைமுறை
———-
சிந்திக்கத் தெரிந்த சிறார்கள்
சிறப்பு வல்லமை உடையவர்கள்
சிந்திக்க. தெரியாதவர் என்றும்
சிக்கலில் மாட்டுவார்கள் என்பதே
மிலேனியத்தில் இப்பபோ மினுங்குது
மின்னலெனத் தோன்றும் மின்மினி
கணிணியில் உலகம் கரிசனையாய்
கண்டு கொண்டிருக்கும் வளர்ச்சியிது
அடுத்த தலைமுறை இப்போது
அதீத வளர்ச்சி கண்டுள்ளது
எடுத்த முனைப்பு எங்கேயோ போகுது
தடுக்க. முடியா வெற்றியில்
தலைநிமிர்ந்து நிற்கிறது
சாதனை படைக்கும் சிறார்கள்
சாதிக்க. பிறந்த அடுத்த தலைமுறை
வேத்த்தில் இவர் பெயர்
வேண்டிய வரலாறு
போற்றியே இவரை
வெற்றி வெற்றி என
வாழ்த்துவோம் தமிழ் பாங்குடனே

Nada Mohan
Author: Nada Mohan