மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

குருதிப்புனல்
————
குமுகத்திற்கு ஏற்பட்ட குந்தகம்
குருதிப்புனலாக எம்மண்ணில்
கந்தக மணம் வீசும்
வேதியல் சாதனை வீராப்பு
மண்ணின் மைந்தர் மறத்தமிழன்
எண்ணிய எண்ணம் ஏற்றம்காண
தண்ணிமை போல தரகம் பேசி
தந்திரம் மிக்க எதிரிகளோ தரைமட்டமாக்கினர்
ஒன்றுமறியா எம்மக்கள் எம்மண்ணில்
நல்லது நடக்கும்எனநம்பி
வேகும் நெஞ்சுடன் வெந்துவெதும்பி
கையில் பிடித்த உயிர்கழன்று போனதே
குருதிப்புனல் காணவென்றே கொடியவர்
செய்த செய்கை தமிழர்களை
கொன்று குவித்து குதூபலித்தது
என்றிவர் செய்த பிழையுணருவரோ!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading