மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்

மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும் இயற்கை
சேதிகள் சொல்லும் வாழ்க்கை இது

குருவிகளின் ஓசையும் கேட்கும்
கூடவே சோடிகளை சேர்க்கும்
பருவ எழிலை ரசிக்கும் கண்கள்
பாரை பார்க்கும் பருவ வண்ணம்

பச்சை துளிர்க்கள் மரங்களில்
பார்க்கும் இடமே ரம்மியம்
இச்சை எமக்கு இயற்கையில்
இதுவும் மண்ணில் அதிசயம்!

கதிரவன் ஒளியின் கனலின் வீச்சு
உடலைச் சூடாக்கும் சூழல் வெப்பம்
வதியும் இடமே வசந்தத் துளிர்ப்பு
வா வா வசந்தமே வண்ண சுகந்தமாய்!

நகுலா சிவநாதன் 1849

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading