அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

கேட்டுமே நின்றுவிடு

சிவருபன் சர்வேஸ்வரி

கேட்டுமே நின்றுவிடு

மெளனம் ஏனோ நிலவும் சுடுகிறதே //
சயனமென்ன கதிரவனைக் காணலையே//
விரையமென்ன விடுதலை வரவில்லையே //
விசனமென்ன பதிலும் தருவதில்லையே //

அயராது கொட்டுகிறாய் யாரு சொல்லித்தந்தது //
புயலாக நிற்கின்றாய் சீற்றமேன் வந்தது //
துயிலாமல் சுழல் கின்றாய் சூட்சியார் செய்தது //
புலராத நாட்கள் இல்லையே புலர்துவிடு நன்றாக நீயும் //

கனவுலகுக் காரிகையே கார்மேகம் அகலட்டும் //
நினைவுலகில் வந்துவிடு நிம்மதியும் பெறவேண்டும் //
வனமது இருண்டது போல் வையகமே இருண்டுவிட்டால் //
மையல்விழி என்னாகும் மானிலத்து மாதாவே //
கேள்வியொன்றைத் தந்துவிட்டேன் கேட்டுமே நின்றுவிடு //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading