கொதித்தெழும் காலநிலை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.01.25
ஆக்கம் 174
கொதித்தெழும் காலநிலை

இன்ப துன்பம்
இரவு பகல்
தொடர்வது போல
வெயில் , மழை
கோடை ,மாரி என
மாறி மாறி வந்திடுமே

சிங்கப்படைகளாய்
அதி வெப்பமும் , மழை
வெள்ளமும் போட்டி போட்டு யுத்தம் தொடங்க பித்தம்
பிடித்திடுமே

தீ மூட்டும் கொடூரம்
பச்சைப் பசேல் கானகம்
எரிந்து தங்குமிடம்,
தொழிற்சாலை வெந்து
சாம்பலாகிப் பொசிந்தது ஒரு புறம்

சுழல் காற்று,குளிர்
வெள்ளப் பெருக்கில்
வீடே மிதந்து வர
அங்குமிங்கும் ஓடி அலைந்து திரியும்
மாந்தர் எங்கே போவது என்று தெரியா விழி
பிழிந்திடுதே மறுபுறம்

புலரந்திடாதா புது
வாழ்வு என ஏங்கும்
மாந்தர் மனதில்
உலகைத் தாங்கும்
இறைவன் கொதித்து
எழும் காலநிலையில்
கருணை தந்திடுவானா ?

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading