ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சக்தி

ராணி சம்பந்தர்

சத்துக்கள் பல உறிஞ்சி
சொத்துச் சேர்த்த சக்தி
முத்துப் போல வலிமை
ஆனது

இயற்கை சூரியக் கதிர்
தெறிச்சுக் கிடைத்த உயிர்ச்
சத்தால் தோல் திடகாத்திரம்
ஆனது

இலைவகை,மரக்கறி, பழம்,
தானியமெனப் பயிரில்
பத்தாக்கி நோய் எதிர்ப்புச்
சக்தி உருவானது

செயற்கையில் நன்மை, தீமை
கருவாக யுக்தி ஆனது
மாந்தரைச் சித்தராக்கி
சுய அறிவைக் கூட்டும்
அன்பின் சக்தி ஆனது

இவற்றை அடக்கிப் பதி பக்தி
தரும் ஆதி பராசக்தியுமே
ஆண்டவனில் ஓர் பாதியே.

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading