கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
மகளிரைப் போற்றிடுவீர் மகளிரைப் போற்றிடுவீர்!
அறுசீர் விருத்தம்!
கற்கண்டாய்ப் பேசிடுவாள் மங்கை
கலாச்சாரம் காத்திடுவாள் கண்ணாய்
நற்குணங்கள் பேணிடுவாள் நங்கை
நல்லவைகள் போதிப்பாள் நன்றாய்
சுற்றத்தார் போற்றிடவே சிந்தை
செதுக்கிடுவாள் சாதுரியம் கொண்டே
பற்பலரும் புகழ்ந்திடவே பாரில்
பக்குவமாய் வாழ்ந்திடுவாள் என்றும்!
அருமையான பிறப்புத்தான் பெண்கள்
பெருமைகளும் கண்டிடுவாள் பேச்சில்
பண்புடனே நடந்திடுவாள் பூவில்
மருமகளாய் மறுவீடு சென்று
மற்றுமொரு தாயாகித் தன்னை
உருக்கியேதான் உழைத்திடுவாள் உண்மை
உரைத்திடுவாள் உயர்ந்திடவே இல்லம்!

அன்னையாக அண்ணியாக மாறி
அரவணைத்தே சென்றிடுவாள் என்றும்
இன்பத்தின் எல்லையிலா ஊற்றாய்
இன்னல்கள் சுமந்திடுவாள் தன்னுள்
வன்கொடுமை வாட்டுகின்ற வேளை
வனிதையவள் என்செய்வாள் பாவம்
பொன்னாக மதித்திடுவீர் பெண்ணை
போற்றிடுவீர் போற்றிடுவீர் நாளும்!

நன்றி ப.வை.அண்ணா உங்கள் பணி பாரியபணி! மிகுந்த வாழ்த்துகள்!
திரு.நடா மோகன் அவர்களே! உங்களுக்கும் மிகுந்த நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading