மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை!
விருப்புத் தலைப்பு
தமிழுக்கும் அமுதென்று பெயர்!
அறுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் விளம் விளம்/விளம் விளம் விளம்

வல்லினம் மெல்லினம் இடையினம்
வகைகளும் கண்டது தமிழ்மொழி
பல்வகைப் பாக்களும் பாடினர்
பாமரர் விளங்கவும் செய்தனர்
தொல்பொருள் ஆய்விலே முதலிலே
தோற்றமும் பெற்றதே தமிழ்மொழி
கொள்கையைக் குருதியில் கொண்டவன்
கொற்றவன் சபையிலே முதலிது !
தரணியில் தரமுடைத் தமிழ்மொழி
தந்திடும் இன்பமும் தேனது
பரணியும் பாடிட பக்தியே
பாரதி வள்ளுவன் பெருமையும்
உரமது தந்திடும் உத்தமர்
உயர்ந்தனர் உலகமும் அறியவே
வரமெனப் பெற்றது வாகையே
வாழ்த்துவோம் உலகெலாம் முழங்கவே!
இரத்தலும் ஆகுமோ? இல்லையே
அறம்செய விரும்பென அவ்வையும்
உரக்கவே சொன்னவள் அத்துடன்
ஊக்கமும் கைவிடேல் என்றனள்
சிரமமும் இல்லையே சிற்பமாய்
செந்தமிழ் வாழுமே என்றுமே
மரபினைக் கற்கவே மனங்களும்
மலருமே அமுதெனப் பருகவே!

கவிதைநேரத் தொகுப்பாளினிகளுக்கும் வாணி மோகனுக்கும்
வாழ்த்துகளும் நன்றியும் உரித்தாகுக!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading