“சக்தி”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_205

“சக்தி”
முப்பெரும்
தேவியில்
முதலான சக்தியே
துர்க்கை இலக்குமி
சரஸ்வதி
மூன்றும் முத்தான சக்தியே
சொத்தென கொள்வோம்!

வீரத்தின்
விதை நிலம்
வீற்றிருக்கும் தாயே
சேற்றில் செந்தாமரையில் உறையும் உத்தமியே
வெண்தாமரையில் வீற்றிருக்கும் வெண்கமல வாகினி!

வெள்ளையனை ஓட ஓட
விரட்டிய சக்தியே
உன் முத்தியால்
பனிச்சம் காய்களால்
பலமாய் வீசியே
விரட்டினாய்
சக்தியே!

வீரவரலாறு
சரித்திரமாய்
உண்டு
வற்றாப்பளையில் பத்தாமிடமாய் பதியமிட்ட தாயே தாயே!

நன்றி
வணக்கம் 🙏

Author: