சக்தி

ஜெயம்

சக்தி

அண்டம் அசைக்கும் அதிசயம் சக்தி
மண்மேலே ஆக்கும் மூலமாய் சக்தி
கற்பனைக்கும் எட்டாத ஒன்றாக சக்தி
உற்சாக வாழ்வுக்கு கருவூலம் சக்தி

காரியம் அமைக்கும் உறங்காத சக்தி
வீரியம் பீறிடும் சுரப்பாக சக்தி
தாய்சேய் உறவிங்கே பாசத்தின் சக்தி
தேய்வில்லா காதலும் நேசத்தின் சக்தி

உயர்வாம் மாதர்க்கு படைக்கும் சக்தி
பயத்தை பந்தாடும் வலிமையாம் சக்தி
வளங்களை அளித்திடும் இயற்கையின் சக்தி
நலன்களை தருவதாம் இறைவனின் சக்தி
சக்தியால் கிடைத்ததிந்த உலகமஹா புத்தி
சக்தியின் வடிவங்களாய் எம்மையே சுற்றி
நம்பினால் நடத்திவிடும் பிரபஞ்ச சக்தி
எம்மை வழிநடாதத்துவதே உயிரெனும் சக்தி

Author: