சர்வேஸ்வரி கதிரித்தம்பி

ஏராளம்…

ஏர்பூட்டி உழுத விளைநிலம்…..
பலபல விதைகள்
விதைத்த நிலம்…
வியப்போடு விழிகள் அகல பார்போற்றி மகிழும் பசுமை நிலம்….
சொற்களுக்குள்
அடக்கிட முடியா
பெரும் விருட்சமாக பரந்த நிலம்…
ஆக்கிவைத்த வாரிசுகள் அன்னைமொழியில் தேனமுதம்
சுரக்க வைக்கும்
ஊற்றான நிலம்….
செய்த தவம் நாம் ஏதோ ….
எட்டுத்திசையும் பேரொலி முழங்கிட….லண்டன் மாநிலத்தில்
ஈஸ்ட்காம் நல்லகத்தினில்
கலையகம் நுழைந்த பேறு …ஆண்டுகள் இருபத்தைந்தினை நிறைத்த வலிமை…கூட்டுச்சேர்வினில் இல்லறத்தரசியோடு கண்ணிமைக்குள் காக்கும் செல்லமகள் தியாகம்….
நம்மாலான கடைமை நானிலமுள்ளவரை கரம்கோர்த்து
நன்றி நவிலலாக
தொடரும் பணியை வாழ்த்திப் போற்றிடுவோம்…
வாழ்க..
வாழ்க…
வாழ்க..
– சர்வேஸ்வரி கதிரித்தம்பி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading