“சாதனை “

நேவிஸ் பிலிப் கவி இல(353) 07/11/24

சிப்பிக்குள் முத்தெனவே
தித்திக்கும் சொத்தாக
பார்ப்போர் மனம் மகிழ
சரித்திரம் படைக்குது
அடுத்த தலை முறைக்காய்
பாமுகம்

நலமான உளப் பாங்கு
நேர்மையான எதிர் நோக்கு
வளமான திசை நோக்கி
நகர்த்திச் செல்லும் பக்குவமும்

தனக்கென வாழா
பிறர்க்கென வாழும்
தியாக மனதோடு
உளி கொண்டு உள்ளங்களை
செதுக்கிடும் நேர்த்தியும்

சிந்தனைகள் சிறகடிக்க
கனவுகளை நனவாக்கி
கருத்துக்களை கல்வெட்டாக்கி
சரித்திரங்கள் உருவாகட்டும்

பாதைகள் தெளிவாகி
பயணங்கள் இனிதாக
தோல்விகள் படியாகி
வெற்றியே குறியாகட்டும்

வார்த்தை வளமாக
வாழ்க்கை வழியாக
ஆயிரம் மைல்களும்
சலிக்காமல் ஓடும் நதியெனவே
என்றும் எங்கும் பாய்ந்து பரவிடவே
பாரெங்கும் ஒளி வீசு பாமுகமே
வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம்

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading