சாதனைப்பகிர்வும் சரித்திரச்சுவடும்

இரா விஜயகௌரி

சரித்திரச் சுவட்டினை
தினமும் பதித்தான்-இவன்
சமர்களை நாளும் வாழ்வாய்
வழியாய் பாதை தொடுத்தே எழுந்தவன்

போராட்டமும் போட்டியும் -இவன்
குரல்வளை நசுக்கிட- நாளும்
புதிதாம் படைப்பினை விதைப்பாய்
நம்பிக்கைத் தொடுப்பாய் தொடுத்தவன்

தமிழின் இழைதனில் இழைய
இளைய தலைமுறை வடத்தினை வலிந்து
வளைந்து இயைந்து இசைந்து
இயல்பாய் வளமாய் வாழ்வாய். கலந்தவன்

உயிர் மூச்சின் ஆளுமை உராய்ந்து செப்பி
முயன்றே எழுந்திடமுழுக்கரம் கொடுத்தவன்
அழகிய மலர்களின் அணைப்பின் தந்தை
இதயம் கலந்துஇயல்புற உயர்த்தினான்

பகட்டே இல்லா பாமுகத்தந்தை
பழகிச் செலுத்திடும் பவ்யமாம் குழந்தை
பாவலன் பாரதி செல்லம்மா போலொரு
வாணி மகள் இவனது வலக்கரம் கலந்தாள்

இராகவி மகளாள்இன்முகம் கலக்க
சாதனைப்பகிர்வு. சரித்திரம் தொட்டது
உயர்ந்தவர் பலரின் உன்னத மகிழ்வினில்
உயர்வுள்ளல்கொண்டன்ன் எங்கள் ஆளுமை

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading