03
Apr
ஜெயம்
மண்ணிலே மகிழ்ச்சியை கொண்டுவர துளிர்ப்பாகும் வசந்தம்
கண்ணிலே எழிலை புகுத்தும் இயற்கையின் வனப்பும்...
03
Apr
துளிர்ப்பாகும் வசந்தமே…
வசந்தா ஜெகதீசன்
துளிர்பாகும் வசந்தமே...
சொட்டுச் சொட்டாய் மழைத்துளி
சொல்லி வீழுதே தரைவழி...
03
Apr
துளிர்ப்பாகும் வசந்தம்
ராணி சம்பந்தர்
குளிரும் கூதலும் குறைந்திடவே
பளீரென மனமது நிறைந்திடுதே
ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே
துள்ளிக் குதிக்குது சந்தோஷம்
மெல்லத்...
சாமினி துவாரகன்
முகமூடி
ஆரா!
கவனமாய் இரு!
சுதந்திர வானில்
சிறகடித்து
பறப்பதாய் எண்ணி
அலட்சியமாய்
இருந்திடாதே!!!
கல்லெறிந்து
சிறகொடிக்கவும்
அம்பெறிந்து
உனை அழிக்கவும்
ஒரு கூட்டம்
அலைந்து கொண்டிருக்கும்
மறந்திடாதே!!!
புளுகு மூட்டைகளும்
புறங்கொள்ளிகளும்
வஞ்சகப் பிசாசுகளும்
வலை வீசிக் காத்திருக்கும்
சிக்கிண்டு விடாதே!!!
அலங்கரிக்கப்பட்ட
அழகிய குழந்தையே
ஆரா!
நீ கவனமாய் இரு!!!
முகமூடிகள்
அழகானவை!!!
வேடிக்கையானவை!!!
சிரிக்க வைத்து
சிதைத்து விடும்
வியக்க வைத்து
விழுத்தி விடும்!!!!
நுரைகள் அடங்கும் வரை
தேநீர் தெரியாது
திரைகள் விலகும் வரை
உண்மை புரியாது!!!
இளங்குமரியே
ஆரா!
கவனமாய் இரு!
அடிமை ஆகிவிடாதே!!!
ஆசைக்கு மட்டுமல்ல
அன்புக்கும் கூட………
அன்புடன் இவள்
-சாமினி துவாரகன் –
18.02.2025

Author: Nada Mohan
06
Apr
மனோகரி ஜெதீஸ்வரன்
முதுமை காணும் முன்னே
மூச்சை விடுபவர் பலரே
முதுமை கண்டு வாழ்பவர் சிலரே
...
06
Apr
மனோகரி ஜெதீஸ்வரன்
முதுமை காணும் முன்னே
மூச்சை விடுபவர் பலரே
முதுமை கண்டு வாழ்பவர் சிலரே
...
05
Apr
சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_186
"முதுமை"
தன்னம் தனியாக
தள்ளாடி வாழாது
அன்பு உறவுகளுடன் உறவோடு இருப்பது!
முதுமை...