சிந்தனை செய் மனமே

ஜெயம்

நேர்மறை எண்ணங்களே வாழ்க்கைக்கு சிறப்பு
எதிர்மறை எண்ணங்களினால் துன்பங்களே பிறப்பு
எண்ணம் போல் வாழ்க்கையென்பதே உண்மை
இதைப் புரிந்துவிடின் வாழ்நாளில் நன்மை

வாழ்க்கை கற்றுக்கொடுக்கின்றது
பாடங்கள் பலவாக
அந்த பட்டறிவே வாழ்க்கையின் பலமாக
வாழ்க்கைக்கு அர்த்தம் காண முடியும்
புரிந்துகொண்டு செய்ற்படின் காலமதும் விடியும்

சாகும் வரையான இந்த வாழ்க்கை
போகும் பாதை எதுவரைதான் நீள்கை
பயனுள்ள வாழ்க்கையை இதுவரை கொண்டோமா
பயமின்றி நாட்களை மகிழ்ச்சியாய் கொண்டாடினோமா

தவறை செய்யாவிட்டால் மனம் பண்பட்டுவிடும்
அன்பை கொடுத்தால் செயல் புனிதமாகிவிடும்
வாழ்க்கையில் பெறவேண்டிய பதினாறையும் பெறலாம்
மனங்கொண்டால் உறுதி அத்தனையும் தரலாம்.

Author: