அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி -1632

சங்கமம் இதுவன்றோ!

நதியொன்று கடலைச் சந்திக்கும்
கழிமுகத்தில் களிப்பு விஞ்சும்
பறவையொன்று சிறகடித்துப் பறக்கும்
உறவெனத் தாயை அன்பால் அணைக்கும்!

கருச் சுமந்த கருவறை தேடிக்
குருவான முதல் வரம் நாடி
துருவம் விட்டுத் தூர ஓடும்
துயரம் விலக்கி சிகரம் காணும்!

எத்தனை கால ஏக்கம் இது
ஏனிப்படித் தூரம் ஆனது விதி
காந்த முனைகளின் ஈர்ப்பு நியதி
கலந்து மகிழ்வது கால நதி!

கட்டி யணைத்துக் கதை பேசி
கடந்த நாட்கள் சேதி கூறி
குடத்துள் ஒளிர்ந்த அன்னை முகம்
குவலயம் அறிய ஒளிர்வது நிஜம்!!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading