அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

நேசத்தின் ஆர்ப்பரிப்பில் நெஞ்சம் சிலிர்க்கிறதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கண்ணும் கதைபேசும் காதலின்பம் கூடும் //
மின்னும் கதிரொளியே மிளிர்ந்தாய் என்னகம் //
வீசும் தென்றலே எனது சுவாசக்காற்றே //
வாசமலரே மிகையாக வந்தவளே நீயும் //
சிலையாக எனதுள்ளம் சிலநொடியில் கரைந்ததே //
உருக்கியும் வார்த்தானோ ஊடுருவிப் பாய்கிறாயே //
பெருக்கி விட்டாய் பெருமையும் கிடைத்ததடி //
நேசத்தின் ஆர்ப்பரிப்பில் நெஞ்சமும் சிலிர்க்கிறதே //
பாசத்தின் நிலையை பாங்காய் பரப்பினாய் //

ரீங்காரம் இடும் வண்டாகினேன் பூங்கொடியே //
ஆங்காரம் இன்றியே அணைப்பேன் கண்ணே //
சங்கீதமாய் சந்தோசமாய் வாழ்வோம் என்றுமே //

தங்கக் குடமே தளராத தளிரே //
வங்கக் கடலிலே விளைந்த வலம்புரியே //
சிங்கப் பெண்ணே செவ்விதழ் தேனே //
சீராட்ட வந்தவளே சிவகங்கையும் நீதானோ //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading