சிவரூபன் சர்வேஸ்வரி

சூரவதை
ஃஃஃஃஃஃஃ

சுழன்றடித்தது காற்று சுற்றி எரிந்தது தீபம் //
உழன்று கொண்டது மனங்கள் உருவமின்றிய காட்சி //
தளர்ந்து போனதகம் தடுமாறியது பலம் //
மலர்ந்து நின்றவுறவுகள் மடிந்துபோனதே மாயம் //
புலர்ந்து விட்டபோதிலும் வெண்புரவி ஓடவில்லை //
உலர்ந்துபோன எண்ணத்தில் ஊனம் சூழ்ந்தது பாராய் //

அசுரனையழித்து தேவரைக்காத்த வேலவன் எங்கே //
சூரவதை செய்யவும் அவன் மீண்டுவரவேண்டும் //
பாரச்சுமை கண்டே பாழும் நிலைவேண்டாம் //
வாழும் காலமதிலே வாகை சூடவேண்டும் //

வேலுமினிதே வேட்கையும் தணிவிப்பாய் தரணியிலே //
நாளுமுனை வேண்டினேன் காணுமின்பம் தருவாய் கந்தா //

சிவருபன் சர்வேஸ்வரி

🌞🌸🌺💐🌷✍✍✍✍✍

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading