சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_180

“நம்பிக்கை”

நம்பிக்கை உன் தும்பிக்கை
விழுந்தாலும் எழுவேன்
ஏற்றம் காண்பேன்
எழுந்து நிற்பேன்
உறுதியை உனதாக்கு!

நோய் வந்தாலும்
நொந்து போகாதே
நாள்பட்ட நோயும்
நள்ளிரவில் போய்விடும்!

உடல் உழைப்பை
உனதாக்கு
உற்சாகம் உன்னருகில்
தட்டி எழுப்பு
தளர்ந்து விடாதே!

உணவை மருந்தாக்கு
உடல் பயிற்சியை
விருந்தாக்கு
ஊக்கத்தை கைவிடாதே
ஊர் குருவி போல்
சுத்தி சுழன்றிடு!

நம்பிக்கை தான் வாழ்க்கை
ஆழமான நம்பிக்கை
ஆலமர நிழல் போன்றது!

நன்றி வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
22.02.25

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading