சிவா சிவதர்சன்

[ வாரம் 292 ]
“சிறுமை கண்டு பொங்குவாய்”

சிறுமை கண்டு பொங்கி எழுபவன் தமிழனடா
இது உன் இயல்பான அடிப்படைக்குணமடா
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என இருவகையடா
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பொதுமறையடா

வாழ்க்கை மரபால் உயர்வும் தாழ்வும் விதிமுறை
மனிதகுலவாழ்வை உயர்த்திய தமிழர் தலைமுறை
சமுதாய சீர்கேடுகளை களைந்து காக்கும் அணை
தன்னுயிர்போல் பிறரையும் நேசிக்கும் முறை

இனமத மொழி நாட்டுப்பற்று கொண்டவர்
சிறுமைக்கெதிராய் போர்க்கொடி தூக்கியவர்
இவர்களே மானிடம் வாழ தியாகிகளானவர்
ஆஷாடபூதியாய் இன்றும் வலம் வருபவர்

வயிறுபிழைக்க தலைவராய் ஒட்டிக்கொள்வர்
அறிவு அனுபவமுடைய இன்றைய தலைமுறை
ஏமாற்றுவதோ,ஏமாறுவதோ இல்லை இதுவரை
சிறுமைகண்டு சிறுத்தையாய் பொங்கிஎழுவீரே!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading