தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!! கவிதை-2311 தண்ணீருக்காய்த் திரளும் போர் மேகங்கள்..!! ஆழக்கடலைக் கடக்கின்ற அத்தனை கப்பல்களும் அள்ளிக் கொணரும் நமக்காய் அத்தியாவசியப் பொருட்களை.. அந்தோ...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர் மண்ணிற்கும் விண்ணுக்குமே மழை நீரில் ஏணிகட்டி குதூகல கொண்டாடத் தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள் தாகம் சுழலும்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..

வசந்தா ஜெகதீசன் தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்... வரட்சி நிலைபோக்கிடுமே வளமது திரண்டிடுமே கார்மேகக் கறுக்கலிலே கனமழை பெய்திடுமே காரியத்தின் சித்திகளும் கைகூடும்...

Continue reading

ஜமுனாமலர் இந்திரகுமார்

பச்சைக் குவளை
கதிரவன் ஒளியால் பச்சையம் பெறுவாள்
மழையின் துளியால்
துளித்துச் சிரிப்பாள்
பனியின் பொழிவில்
பூத்துச் சிரிப்பாள்
குளிரின் கொடுமையில்
மரத்து நிற்பாள்
இலை உதிர்காலம்
பழுத்தே விழுவாள்
கள்ளை ஏந்த
பிளாவாய் மடிவாள்
பந்தியில் குந்த
தலை விரிப்பாள்
பீப்பி ஊத
குழாய்ச் சுருள்வாள்
கோவில் விழாவில்
தொங்கி நிற்பாள்
இட்டலிச் சட்டியில்
வட்டமாய் இருப்பாள்
வீட்டு வேலியை
பின்னலால் மறைப்பாள்
பொங்கல் பானையில்
இடையாய் இருப்பாள்
பூரண கும்பத்தில்
மங்களமாய் இதழ் விரிப்பாள்

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading