ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-61

11-03-2025

பங்குனி / பங்கு(நீ)

வசந்தத்தின் வாசல் பங்குனியே
வாழ்தலின் விரதமும் விழாவும் இம்மாதத்திலே
தமிழ் மாதங்களின் கடைக்குட்டியே
தமிழர் மனங்கள் பொங்குதே சந்தோஷத்திலே

புது வாழ்வின் ஆரம்பம் பங்குனியே
பசுமை பூக்கும் எங்கும் இனியே
புலம்பும் மனங்களில் துளிர் வருமே
பலவகை நோய்களும் அகலும் இங்கினியே

சூரியன் பயணம் மீனராசியிலே
சுமூகமான வாழ்வு தரும் மாதம் இதுவே
பங்குனி உத்திரம் தரும் புது நம்பிக்கை ஆன்மீக எழுச்சி
பல தெய்வ திருமணங்கள் இம் மாதத்திலே.

ஆண்டவன் படைப்பில் என் வாழ்வில்
அதிசயம் முதல் மகவு பங்குனியிலே
பொங்கி வரும் ஆனந்தம் என்ன சொல்ல
பேரனாந்தம் பங்கு நீ தந்தவனே.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading

    வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

    Continue reading