ஜெயம் தங்கராஜா

சசிச

ஆறுமோ ஆவல்

உள்ளத்துள் குடிபுகுந்து எண்ணத்தை கிள்ளிவிடும்
அள்ளியடித்து செய்துவிட மகிழ்ச்சிக்குள் தள்ளிவிடும்
தரைமீது கால்களும் படாத ஓர்நிலை
கரையை தாண்டியும் நிற்காத பேரலை

ஆறாது ஆறாது ஆயுளுக்கும் ஆறாது
கூறாது கூறாது போதுமென்று கூறாது
சின்னச்சின்ன செயல்களுள்ளும் சந்தோசம் முட்டிவிடும்
இன்பத்தின் தேசமொன்றை சிந்தையும் கட்டிவிடும்

உகந்ததாக கருதுவதை வேண்டிநிற்கும் உணர்வு
அகமதுவும் சுகமதனை வெளி கொணர்வு
தள்ளாத வயதினிலும் நிறைவேற்றத் துடித்துவிடும்
கல்லை கொஞ்சிக்கொண்டு கண்ணாடி வெடித்துவிடும்

ஜெயம்
05-06-2023

Nada Mohan
Author: Nada Mohan