தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 660

வரப்புயர

வரப்புயர கொண்ட  நீர் உயரும்
உரமாக வேர்களுக்கு விளைந்திடும் பயிரும்
வரவுயர கண்ட வாழ்வு உயரும்
உறவாக பணமும் மறைந்திடும் துயரும்

தாழ்ந்து அடியொட்டி  தண்ணீர் வற்றியது
வாழ்வில் அடிபட்டே கவலை பற்றியது
மூழ்காது  சோகத்தினுள் இருந்துவிடின் லாபம்
ஏழ்மையைத் தாண்டாத மாந்தரல்லோ பாவம்

மேல்நிலை என்பதற்கு கூடவுண்டு சிறப்பு
கீழ்நிலை பொருட்களிற்கும் இல்லையொரு மதிப்பு
சுற்றியொருதரம் பார்ப்பின் பலருக்குண்டு தவிப்பு
சொற்களிலே சாலமூட்டி கற்பனையின் குவிப்பு

எது உயர்ந்ததால் எது உயர்ந்தது
அது பதிந்ததால் எது பதிந்ததது
இது விடைதேடும் கேள்வியாய் உள்ளது
பொதுவாக இரகசியத்தை பகிர்ந்திடின் நல்லது

அந்தநாள் வரும் மகிழ்ச்சி அதிகரிக்க
எந்தநாள் என்றென தெரியவில்லை உச்சரிக்க
ஒன்று உயர்ந்தால்தான் இன்னொன்றும் உயருமா
என்றநிலை இன்றும் உண்மையைத்தான்  பகிருமா

ஜெயம்
05 – 07 – 2023

Nada Mohan
Author: Nada Mohan