ஜெயம் தங்கராஜா

சசிச

பெற்றோரே

ஞாலத்திலே மனுஷ பாக்கியம் கிடைத்தது
கோலத்தை ஈருயிர் சேர்ந்தே படைத்தது
பொய்யான கூடு என்றாலும் கற்றோரும்
மெய்யென்றே நினைத்து படைத்தார்கள் பெற்றோரும்

பாக்கியம் கிடைத்தது அன்னையின் அருகில்
போக்கிய வாழ்வெல்லாம் தந்தையின் நிழலில்
காவிக்கொண்ட நல்வாழ்வை தந்தவர் இவர்கள்
கோவிலுக்குள் இருக்கவேண்டிய தெய்வங்கள் அவர்கள்

தாய் ,மொழியாக தந்தையோ வழியாக
சேய் விழிகளின், பார்வையின் ஒளியாக
அரியதோர் உறவுகளாய் பெற்றோர்களே உலகில்
பெரியபேர்கள் அவர்களிடம் கற்றுக்கொண்டேன் பலதை

கருத்தரித்தேன் , கொண்டார்கள் என்னாலே  மகிழ்ச்சி
உருத்தித்த பின்னரும் தொடருதந்த நிகழ்ச்சி
ஐயமில்லை எனக்கு அருள்தரும் சாமிகள்
வையகத்தின் மேலே சுழலும் பூமிகள்

ஜெயம்
15-05-2023

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading