தன்னம்பிக்கை சிறகுகள் 80

ஜெபா ஸ்ரீதெய்வீகன் – கனடா
18-12-2025

தடைகள் வரும்
தடுமாற்றங்கள் வரலாம்
தன்னம்பிக்கை சிறகுகள்
தளர்த்தாமல் உயர்ந்திடு

விதியென்று ஒதுங்காதே
விழுந்தால் எழுந்திடு
அவமானங்கள் எரிபொருளாய்
உள்ளொளி பெருக்கட்டும்

தோல்விகள் வீழ்ச்சியல்ல
தடைகளின் படிகளாய்
பலவீனத்தில் வருந்தாமல்
பலத்தை அடையாளமாய்

விதைக்குள் முடங்கினால்
விருட்சமும் கனவுகளாகிடும்
வலிகளில் செதுக்கி
வரலாறு படைத்திடு…

தன்னம்பிக்கை சிறகுகளால்
தளராமல் பறந்திடு…..

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading