தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

திங்கள் 99

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026

தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு தந்த ஓய்வை நகர்த்தி
நமது கனவை மனதில் இருத்தி

திங்கள் தொடங்கி உழைத்து வர
தீராக் கடனும் தீர்ந்து போக
கடிகார முட்கள் ஓடும் முன்னே
கனவு சுமந்து போராடு நீயே

நாட்கள் மெல்ல நகர்ந்து செல்ல
ஞாயிறு வந்து ஓய்வைச் சொல்லும்
திங்கள் காலை தேநீர் கையில்
திடமாய் வாரத்தின் பெட்ரோல் போல

மடிந்து கிடந்தால் மகுடம் இல்லை
மனிதா உழைத்தால் வெற்றி உனக்கே
விடிந்து எழுந்தால் மட்டும் போதாது
விவேகம் இங்கே உழைப்பாய் மாறட்டும்

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading