( திருத்தம்) எழுகைக்காய் ஓராண்டு 695

Selvi Nithianandan 02.01.2024

எழுகைக்காய் ஓராண்டு

நடந்தது நடந்தவை தானே
நல்லதாய் நடக்கனும் வாசகம் அன்றோ
கடந்த வருடம் நடந்தது
கடினமும் பலவாய் சேருமே இப்புவியில்

மாசுபடாஅகமும் தூய்மைதான் நன்றும்
மாற்றமாய் நாமும் முன்னேற வேண்டும்
மண்ணிலே மகிழ்சியை வரவழைத்து வென்று
மனதில் உறுதி கொண்டுவாழனும் புவிதனில்

ஏற்றம் கண்டு எழுகை காண்பதும்
ஏணிப் படியாய் உயர்ந்து நிற்கும்
மாற்றம் அடைந்து மானிடம் எழுந்து
மாட்சிமை கொண்டு எழுந்திடல் நன்றே

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading