திறனின் மேன்மை தீட்டும்…

“திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே…”

பூமாதேவியின் புதிய படைப்பாளி…பூக்கும் மலர்களெலாம் அழகான மலர்களே….
பூரிப்பான வருடல் உணர்வுகளில்
சங்கமம்….
பூத்த நாள்முதல் புதுவித தேடல்….

ஆக்கிய திறனின்
மேன்மை தீட்டும்…
தேக்கிய விவேகம் போக்கும் துன்பம்….. அகில விழிகளோ அகல விரியும்……
பொங்கும் ஆனந்தம் நீந்தும் கடலாகும்….
தங்கும் நெஞ்சம்
தரணியின் வீரம்….

ஆற்றிடும் சாதனைகள் இன்னுமாக உயரும்….
தேற்றிடும் மனதினில் தெவிட்டாத உவகை……
சாற்றிடும் புகழ்மாலை சரிதம் சொல்லும்….
போற்றிடும் வார்த்தைகள் அழகான மலர்களின் வாசம்….

பாமுகப் பூங்காவில் ஞாயிறுகளில் பூக்கும் மலர்கள்….
பூமித்தாயின் பூர்வீக அசத்தல் ராகங்கள்…
புரிதலும் தெரிதலும் புதுமையின் பகிர்வு….ஆற்றும் காரியம்
ஆனந்த ஓடையாகும்….
வாழ்த்தும் உள்ளங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு…பல்லாண்டு…

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading