திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே……

“திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே“ கவி….ரஜனி அன்ரன் (B.A) 25.04.2024

வண்ணங்கள் நிறைந்த உலகில்
எண்ணங்கள் சிறகடிக்க
திறமையின் உச்சமும் திறனின் மேன்மையும்
ஆற்றலும் செயற்திறனும் அதீத வளர்ச்சியாக
அற்புதமான திறமைசாலிகள்
அவர்களே சிறப்புக் குழந்தைகள் !

பாமுக ஆசானின் பள்ளியில்
ஆசானின் அன்பிலும் அரவணைப்பிலும்
பயிற்சியும் முயற்சியும் பலமாக்க
மொழித்திறன் இசைத்திறன் பேச்சுத்திறன்
ஓவியம் கணிதமென திறனுகளும் மெருகேற
தொடராக சாதனைகளும் அரங்கேற
அழகிய மலர்களும் ஜொலிக்கின்றனரே !

கவனம் சிதறலாம் பேசவும் தயங்கலாம்
ஆனாலும் அவர்களின் உள்ளத்தில்
அன்பான இதயம் துடிக்கும் எப்போதும்
அவர்கள் மனதும் அற்புதமான கற்பனை உலகே
பொறுமை காட்டிப் புரிந்து கொண்டால்
கைகளைப் பற்றி உலகைக் காட்டினால்
சிறப்பு வெற்றி பெறுவாரே சிறப்புக்குழந்தைகளும்
திறமைக்குக் கரம் கொடுத்து
சிறப்புக் குழந்தைகளை அழகாக்குவோம் !

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading