ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

துறவு பூண்ட உறவுகள்

ராணி சம்பந்தர்

ஆண்டாண்டு தோறுமதில்
மாண்டு குவிந்த மானிடர்
மறைந்ததோர் மாயமதிலே
விறைத்ததே மனங்களிலே

தோண்டத் தோண்டவேயது
நீண்ட அடியோடு சரிந்ததே
சடலத்தின் நினைவுப்படலம்
சரித்திரத் தரிசனங்களிலே

கொஞ்சியதோர் நெஞ்சமும்
அஞ்சியதோர் குஞ்சுகளுமே
வஞ்சக வலையில் பஞ்சமா
பாதகரினது படுகுழியிலே

கொதித்த உலையில் விழுந்து
கருகிய பரிதாபப்படுகொலை
செஞ்ச பாவந்தான் என்ன ?

கஞ்சி கடித்தவன் நெஞ்சு நிமிரப்
பேசிய மொழி தமிழ் என்றோ
நச்சுப் பாம்பின் விஷ அம்பில்
நாலுபக்கமும் குதறிக் கதறிச்
சிதறியதாலே துறவு பூண்ட
உறவுகள் .

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading